இந்தியா, மார்ச் 4 -- Actress Rashmika Manadanna: நடிகை ராஷ்மிகா மந்தனா, சாஹா படத்தில் வெற்றியால் குஷியில் உள்ள நிலையில், அவர் குறித்த பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார், கர்நாடக மாநில காங்கிரஸ் எம்எல்ஏவான ரவிகுமார் கவுடா கனிட்கா. இவர், ராஷ்மிகா கன்னட மொழி, சினிமா, கலாச்சாரத்தை புறக்கணிப்பதாகவும், அவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

கர்நாடகாவில் கன்னட திரைப்படம் 'கிரிக் பார்ட்டி' மூலம் தனது சினிமா பயணத்தைத் தொடங்கியவர் ரஷ்மிகா மந்தனா. இவருக்கு, கடந்த ஆண்டு கர்நாடகாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அந்த விழாவில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். 'எனக்கு ஹைதராபாத்தில் வீடு இருக்கிறது, கர்நாடகா எங்கே இருக்கிறது என எனக்குத் தெரியாது, எனக்கு நேரமில்லை. நான் வர முடியாது' என்று அவர் விழாவை புறக்க...