இந்தியா, பிப்ரவரி 27 -- Actress Priyamani: நடிகை பிரியாமணி 2017 ஆம் ஆண்டு திரைப்பட இயக்குனர் முஸ்தபா ராஜுவை திருமணம் செய்து கொண்டார். அவர்களது இந்து-முஸ்லிம் திருமணம் சமூக வலைத்தளங்களில் பல வெறுப்புக் கருத்துகளை சந்தித்தது. 'லவ் ஜிஹாத்' கிண்டல்கள் தன்னை எவ்வாறு பாதித்தது என்பதை பற்றி சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில், பிரியாமணி கூறி மனம் வருந்தியுள்ளார்.

சமீபத்தில் ஃபிலிம்ஃபேர்க்கு அளித்த பேட்டியில், பிரியாமணி கூறியதாவது, "எனது நிச்சயதார்த்தத்தை அறிவித்தபோது, என்னைப் பற்றி உண்மையாக அக்கறைபடுபவர்களுடன் இந்த மகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். ஆனால், எதற்காக என்று எனக்குத் தெரியவில்லை, தேவையற்ற வெறுப்புச் செய்திகள் என்னைச் சுற்றி வர ஆரம்பித்தன, 'லவ் ஜிஹாத்' போன்ற குற்றச்சாட்டுகளும் தொடர்ச்சியாக வந்தன. நாங்கள் குழந்தைகள் ப...