இந்தியா, ஏப்ரல் 5 -- Actress Poonam Bajwa: காலேஜ் படிக்கும் போதே மாடலிங்கில் இருந்து மிஸ் புனே பட்டம் பெற்றவர் நடிகை பூனம் பஜ்வா .

பின் இவரை தெலுங்கு சினிமா தேடி அழைத்து அவருக்கு முதல் பட வாய்ப்பை 2005 ஆம் ஆண்டு வழங்கியது. பின், அதன் தொடர்ச்சியாக தமிழ், கன்னடம், மலையாளத்தில் ஹிட் நடிகையாக வலம் வந்தார்.

பூனம் பஜ்வாவை தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர் இயக்குநர் ஹரி தான். இவரது சேவல் படத்தில் அக்கா மேல் கொண்ட பாசத்தால் வாழ்க்கையை தொலைக்கும் இளம் பெண்ணாக நடித்து நல்ல பெயர் வாங்கி இருப்பார்.

இந்தப் படத்தை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா போன்ற படங்களில் நடித்திருப்பார்.

ஆரம்ப காலகட்டத்தில் எங்கே இருந்தாய், எங்கே இருந்தாய் என பூனம் பஜ்வாவை இளைஞர்கள் தேடிக் கொண்டிருந்தனர்...