இந்தியா, பிப்ரவரி 23 -- Actress Mumtaj: மயிலாடுதுறை மாவட்டத்தில், மதரஸா திறப்பு விழாவில் நடிகை மும்தாஜ் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் தான் நடிகையாய் இருந்த போது செய்த தவறுகளை எண்ணி மனம் வருந்தியதுடன், இப்போது கிடைக்கும் பாசத்திற்காக நன்றியும் தெரிவித்துள்ளார்.

மதரஸா திறப்பு விழாவில் பேசிய மும்தாஜ், "நடிகையா இருந்த நான், உங்க எல்லாரையும் பாத்துட்டு நான் இங்க வந்துட்டேன். என் வாழ்க்கை பத்தியும் நான் என்ன பண்ணிட்டு இருந்தேன்னும் உங்க எல்லாருக்கும் நல்லா தெரியும். நிறைய பேர் என்ன திட்டிருப்பீங்க. நிறைய பேர் எனக்காக துவா செஞ்சிருப்பீங்க. ஆனா நான் இன்னைக்கு உங்க முன்னாடி வந்து நின்னுட்டு இருக்கேன் பாருங்க. அது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் கொடுக்குற விஷயம் என ஆனந்த கண்ணீருடன் சொன்னார்.

மேலும் பேசிய அவர், இதுக்கு முன்னாடி நான் வெளிய போயிட்டு...