இந்தியா, மார்ச் 2 -- Actress kiara Advani: நடிகை கியாரா அத்வானி கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். தனது கணவரும், பாலிவுட் நடிகருமான சித்தார்த் மல்ஹோத்ராவுடன் சேர்ந்து, தங்களின் முதல் குழந்தையை விரைவில் பெறப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. அவர்கள் இருவரும் ஒரு அழகான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர்.

சமீபத்தில் ராம் சரண் உடன் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்த கியாரா அத்வானி, தான் கர்ப்பமாக இருப்பதை வெள்ளிக்கிழமை அறிவித்தார். "எங்கள் வாழ்வின் மிகப்பெரிய பரிசு விரைவில் வரவிருக்கிறது" என்று குறிப்பிட்டு அவர் பதிவிட்டுள்ளார். அவர் இணைத்த புகைப்படம் மிகவும் அழகாக உள்ளது. கியாராவும் அவரது கணவரும் பகிர்ந்த புகைப்படத்தில் இருவரின் கைகளில...