இந்தியா, மார்ச் 25 -- Actress Keerthy Suresh: சில நடிகைகள் பல காரணங்களால் சில படங்களை நிராகரிப்பதுண்டு. அவர்கள் நிராகரித்த படம் பின்னர் பெரிய வெற்றி பெற்றால் அது பற்றிய பேச்சுக்கள் அதிகமாகும். தற்போது பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் விஷயத்தில் இது நடந்து வருகிறது. இந்திய பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி பெற்ற சாவா படத்தில் முதலில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருந்ததாகவும், பின்னர் வேறு படத்திற்காக இந்த வாய்ப்பை தவிர்த்ததாகவும் தற்போது வதந்திகள் பரவி வருகின்றன.

சாவா படத்தில் ரஷ்மிகா மந்தனா நடித்த கதாப்பாத்திரத்திற்கு முதலில் கீர்த்தி சுரேஷ் அணுகப்பட்டாராம். ஆனால், தான் பாலிவுட்டில் அறிமுகமான பேபி ஜான் படத்தில் பிஸியாக இருந்த கீர்த்தி சுரேஷ் இந்த வாய்ப்பை நிராகரித்ததாக கூறப்படுகிறது. சோசியல் மீடியாவில் பேபி ஜான் படத்திற்காக சாவா படத்தை கீர்த்தி தவி...