இந்தியா, மார்ச் 19 -- Actress Kayadu Lohar: டிராகன் படம் கொடுத்த ஹிட் மூலம் நடிகை கயாடு லோஹர், தமிழ், தெலுங்கு சினிமாவில் செனஅசேஷனல் நாயதியாக தற்போது வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்த ஒரே படத்தின் மூலம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர். சோசியல் மீடியா முழுவதும் கயாடு லோஹரின் புகைப்படங்களே சூழும் அளவிற்கு அவர் மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே பிரபலமாகிவிட்டார்.

இந்த நிலையில், கயாடு லோஹர் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது, கயாடு லோஹர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகிவரும் STR49 படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சிம்புவுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளதாகவும் இதுகுறித்து அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது சிம்...