இந்தியா, பிப்ரவரி 4 -- Actress Death: கோயம்புத்தூரை சேர்ந்த புஷ்பலதா, கொங்கு நாட்டு தங்கம் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் சாரதா , பார் மகளே பார் , நானும் ஒரு பெண் , கல்யாண ராமன் என பெயர் சொல்லும் படங்களில் நடித்தார்.

பின், இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களிலும், துணை வேடத்திலும் நடித்தார். இவர், சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, நடிகரும் தயாரிப்பாளருமான ஏவிஎம் ராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். புஷ்பலதா, கத்தோலிக்க கிருத்துவராக இருந்த போதும் அவர், முருகன் மீது அதீத பக்தியும் பாசமும் கொண்ட ஏவிஎம் ராஜனை காதலித்தார். கரம் பிடித்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தொ...