இந்தியா, பிப்ரவரி 13 -- Actor Vineeth: காதலர் தினம், ஆவாரம் பூ, சிம்ம ராசி, சந்திரமுகி போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் வினித். இவர் தற்போது தன் பாலின ஈர்ப்பாளர்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காதல் என்பது பொது உடைமை படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம் நாளை காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், நடிகர் வினித் கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில், தான் நடிக்க ஆரம்பித்த காலம் தொட்டு தற்போது வரை சேமித்து வைத்திருக்கும் நினைவுகள் குறித்து பேசியுள்ளார்.

அந்தப் பேட்டியில், "காதலர் தேசம் படத்துல தொடங்கி இப்போ காதல் என்பது பொது உடைமைல வந்து நிக்குறேன். காதல எக்ஸ்ப்ளோர் பண்ணது ஒவ்வொரு ஸ்டேஜ்லயும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். நான் நடிச்ச ஆவாரம் பூ, மே மாதம் எல்லாமே ரொமான்டிக் மூவிஸ். அந்த வயசு...