இந்தியா, பிப்ரவரி 8 -- Actor Surya: சூர்யாவின் 44-வது படமாக உருவாகி வருகிறது ரெட்ரோ. எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பின் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவான படம் கங்குவா. இந்தப் படத்தைக் காண சூர்யா ரசிகர்கள் மிகுந்த ஆவலய் காத்திருந்த சமயத்தில் அந்தப் படம் பெரும் ஏமாற்றத்தை தந்தது. இதையடுத்து கங்குவா படம் பாக்ஸ் ஆபிஸிலும் பெரும் தோல்வியை சந்தித்தது.

இந்தப் படத்திற்குப் பிறகு, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரெட்ரோ படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தின் சூர்யாவின் தோற்றமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பீரியட் ஆக்ஷன் பேண்டஸி காதல் திரைப்படமாக ரெட்ரோ உருவாகி உள்ளதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறி உள்ளார்,

இந்தத் தகவல் எல்லாம் மக்களுக்கு தெரியவந்த நிலையில், ரெட்ரோ படக்குழு புதிய முயற்சி ஒன்றி...