இந்தியா, பிப்ரவரி 24 -- Actor Senthil: மிர்ச்சி எஃப்எம்-ல் ஆர்ஜேவாக பலரின் மனங்களை கவர்ந்த செந்தில், நடிப்பிலும் தன் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். தவமாய் தவமிருந்து, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அந்தப் படங்களைக் காட்டிலும் இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடத்த போது தான் பலரது மனதையும் வென்றார்.

பின், அந்தத் தொடரில் இவருக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீஜாவையே திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் இணைந்து பிசினஸ் செய்து வரும் நிலையில், செந்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், மிர்ச்சி செந்தில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியா முழுவதும் வைரலாகி வருகிறது. இவருக...