இந்தியா, ஏப்ரல் 10 -- Actor Prasanna: தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் துணை நடிகராகவும் பல்வேறு விளம்பரப் படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் பிரசன்னா. இவர், ஒரு அஜித் ரசிகர். அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என பல தருணங்களில் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த சமயத்தில் தான் அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி படத்தில் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த தருணத்திலேயே அவர், தன் சந்தோஷத்தை மிக உற்சாகமாக பகிர்ந்திருப்பார். இந்த நிலையில், இன்று ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் குட் பேட் அக்லி படம் வெளியாக உள்ள நிலையில், நடிகர் பிரசன்னா நடிகர் அஜித்திற்கும் தனக்கு அஜித்துடன் நடிக்க வாய்ப்பு தந்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது இன்ஸ...