இந்தியா, பிப்ரவரி 17 -- Actor Pandian: தமிழ் சினிமாவின் 90களின் காலகட்டத்தில் முக்கிய ஹீரோவாக வலம் வந்தவர் பாண்டியன். கிராமத்து நாயகனாக மண் வாசனை படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இவர், அடுத்தடுத்து மனைவி சொல்லே மந்திரம்,வாழ்க்கை, புதுமைப்பெண், மண்சோறு, தலையணை மந்திரம், மருதாணி, ஆண்பாவம், முதல் வசந்தம், கிழக்குச் சீமையிலே என பெரிய பட்டியலே சென்றது.

கதாநாயகன் என்றாலும் வில்லன் என்றாலும் என்னை மிஞ்ச யாரும் இல்லை என நடித்து அசத்தி வந்த இவர், 2008ம் ஆண்டு உயிரிழந்தார்.

அவர் உயிரிழக்கும் தருவாயில், உதவிக்காக எதிர்பார்த்ததாகவும், நண்பர்களாலே ஏமாற்றப்பட்டதாகவும் பல செய்திகள் பரவி வந்தது. இந்த நிலையில், இதுகுறித்து அவரது மகனிடம் பிஹைண்ட்வுட்ஸ் பேட்டி எடுத்தது.

அந்தப் பேட்டியில், "எங்க அப்பா நல்லா குடிப்பாரு. குடிக்கு அடிமையே ஆகிட்டார...