இந்தியா, மார்ச் 16 -- Actor Madhavan: எஸ். சசிக்காந்த் இயக்கியுள்ள 'டெஸ்ட்' படத்தில் நடிகர் மாதவனின் கதாபாத்திரமான சரவணனை அறிமுகப்படுத்தும் புதிய வீடியோவை நெட்ஃபிளிக்ஸ் தளம் வெளியிட்டது. இதனை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். இந்த டிசரில், மாதவன், தன் கண்டுபிடிப்பிற்கான அனுமதி வாங்குவதற்காக போராடி வரும் நபராக காட்டப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க: ஓடிடியில் நேரடியாக வெளியாகும் மாதவன், நயன்தாரா, சித்தார்த் நடித்த திரைப்படம்.. எங்கு? எப்போது ரிலீஸ்?

சித்தார்த், நயன்தாரா, மாதவன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ள 'டெஸ்ட்' திரைப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. இது இந்த விளையாட்டு சார்ந்த திரைப்படம் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. கிரிக்கெட் பின்னணியில் உருவாகியுள்ள இ...