இந்தியா, ஏப்ரல் 6 -- சசிகாந்த் இயக்கத்தில் நடிகர் மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மீன் நடிப்பில் வெளியான திரைப்படம் டெஸ்ட். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதுதொடர்பாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பாலிமர் செய்தியிடம் பேசினார்.

மேலும் படிக்க| டி 20 காலத்தில் டெஸ்ட் எடுபடுமா? டெஸ்ட் படம் முதல் விமர்சனம்..

அப்போது, "பெரிய நடிகர்கள் ஒரு வருடத்திற்கு அல்லது 2 வருடத்திற்கு ஒரு படத்தில் தான் நடிக்கிறார்கள். அது அவர்களுடைய சுதந்திரம். உரிமை. அதை நாம் எதுவும் சொல்ல முடியாது. டெக்னாலஜி டெவலப்பே இல்லாத காலத்துல கூட அதாவது எம்ஜிஆர், சிவாஜி காலத்துலயும் சரி, ரஜினி, கமல் காலத்துலயும் சரி, இன்னும் சொல்லப்போன இப்போ இருக்க விஜய் அஜித் காலத்துலயும் ஒரு 1...