இந்தியா, ஏப்ரல் 6 -- Actor Jai: நடிகர் ஜெய் இசையமைப்பாளர் தேவாவின் சகோதரன் மகனான ஜெய் எனும் ஜெய் காந்த் சம்பத், தமிழ் சினிமாவில் பல வெற்றி தோல்விகளை சந்தித்து தொடர்ந்து சர்வைவ் ஆகி வருகிறார்.

நடிகர் விஜய்யின் தீவிர ரசிகனான ஜெய்க்கு 2002 ஆம் ஆண்டு வெளியான பகவதி படத்தில் நடிக்க அவரது 18ஆவது வயதில் வாய்ப்பு கிடைக்கிறது. அதை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

மிக இளம் வயதிலேயே சினிமாவிற்குள் நுழைந்த ஜெய்க்கு அடையாளத்தை கொடுத்த படம் சென்னை 600028 தான். இந்தப் படத்தில் பல நடிகர்கள் நடித்திருந்தாலும் ஜெய் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்தப் படத்திற்கு பின் ஜெய் நடிப்பிற்கு தனி அங்கீகாரம் கொடுத்த படம் சுப்ரமணிய புரம். இந்தப் படத்தை தொடர்ந்து அவர் பல முக்கிய திரைப்படங்களில் கமிட் ஆகி அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தார்.

பின், அவர் தேர்ந்தெடுத்த சில...