இந்தியா, மார்ச் 16 -- A.R.Rahman: தந்தை இறப்பிற்கு பின், குடும்பத்தை கவனிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். இதனால், தன் பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் தந்தையின் பணியை பின்தொடர ஆரம்பித்தார்.

இதைத் தொடர்ந்து அவர், தன் 17வது வயதில் மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே அத்தனை தெளிவான இசை, தொழில்ரீதியாகவும் மேம்பட்ட இசை என பட்டி தொட்டி எல்லாம் ஃபேமஸ் ஆகினார். அதன்பின், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசை ஆளுமையாக கொடிகட்டி பறந்தார்.

அப்படி பறந்தவர், தனது எல்லையை பாலிவுட் வரை விரிவுபடுத்தினார். ஸ்லம் டாக் மில்லியனர் படத்தில் இவரது இசை இந்திய மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட நிலையில், அந்தப் படம் ஆஸ்கார் விருதுக்கு தகுதி பெற்றது. இதில் இவரின் இசை 2 ஆஸ்கார் விருத...