இந்தியா, ஏப்ரல் 14 -- A.R.Rahman: கோலிவுட், ஹாலிவுட் மட்டுமல்லாமல் ஆஸ்கார் விருதுக்கு பின் உலக அளவில் தனக்கான ரசிகர்களை கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான். இவர், பல இடங்களிலும் பல மேடைகளிலும் தமிழ் மொழி மேல் அவர் கொண்ட பற்றை நிரூபித்திருக்கிறார்.

மேலும் படிக்க| தமிழ் இசையை ஊக்குவித்த ஏ.ஆர். ரஹ்மான்.. ஒப்பற்ற கலைஞன் என பாராட்டிய ஜேம்ஸ் வசந்தன்

இந்நிலையில், சித்திரை 1 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வாழ்த்து செய்தி ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் தான் தமிழ் மொழிக்கு நினைவுச் சின்னம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் இப்போது டிஜிட்டல் வடிவில் இருக்கும் இந்தப் பணி விரைவில் நனவாகும் என்றும் கூறியிருக்கிறார்.

அதாவது, " 'தமிழ்' உலகின் செம்மொழிகளில் இன்றும் பரிணமித்து வளரும் மிகத்த...