இந்தியா, மே 8 -- ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 08) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். இதில், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி, இன்று வெளியான 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600-க்கு 599 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் ஆங்கிலத்தில் மட்டும் 99 மதிப்பெண்களும் மற்ற பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார்.

600க்கு 599 மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து மகிழந்தனர். மாணவி ஓவியாஞ்சலியை கட்டித் தழுவி பாராட்டுத் தெரிவித்தனர். மாணவியின் சாதனையை பாராட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | தமிழ்நாடு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்.. அதிகம் தேர்ச்சி பெற்ற முதல் 5 மாவட்டங்கள் எது தெரியுமா? - விபரம் இதோ!

தமிழ்நாட்டில...