இந்தியா, ஏப்ரல் 14 -- நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று ஏப்ரல் 14 ஆம் தேதி திங்கள் காலை, மும்பை போக்குவரத்து போலீஸ் உதவி எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்ட மிரட்டல் செய்தியில், அவரது வீட்டிற்குள் நுழைந்து அவரைக் கொன்று, அவரது காரை வெடி வைத்துத் தகர்ப்போம் என்று கூறப்பட்டுள்ளது. மும்பை போலீசார் இது குறித்து புகார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க| இவ்வளவு மோசமா படம் எடுத்தா ஃபிளாப் ஆகாம என்ன செய்யும்? பாலிவுட்டை வறுத்தெடுத்த சல்மான் கான்

திங்கள் காலை பல செய்தி சேனல்கள், சல்மான் கானுக்கு அறியப்படாத நபர் ஒருவரிடமிருந்து மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிட்டன. மும்பை போக்குவரத்து போலீஸ் உதவி எண்ணின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பப்பட்ட செய்தியில், நடிகரை...