இந்தியா, ஏப்ரல் 18 -- மணிரத்னம்- கமல் ஹாசன் கூட்டணியில் வெளியான நாயகன் படம் வெளியாகி 38 ஆண்டுகள் ஆகிறது. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கல்ட் படம் மீண்டும் வருமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வருகிறது. இந்தப் படம் கொடுத்த தாக்கத்தால் இந்த கூட்டணி மீண்டும் எப்போது சேரும் என பல ஆண்டுகளாக கேட்டு வந்தனர். இந்த சமயத்தில் தான் அவர்கள் கூட்டணியில் தக் லைஃப் படத்தின் அறிவிப்பு வெளியானது.

அறிவிப்பு வெளியான சமயத்தில் இருந்தே படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடம் தொற்றிக் கொண்டது. அத்துடன் வித்தியாசமான கெட்அப்பில் கமலை பார்த்த ரசிகர்கள் இது எந்த மாதிரியான படம் எனத் தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வத்தை காட்டினர். இந்நிலையில், தக் லைஃப் படத்தின் ஜிங்குச்சா என்ற பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

மேலும் படிக்க| வித்தியாச கெட்டப்பில் கமல், சி...