இந்தியா, மார்ச் 21 -- தொகுதி மறுசீரமைப்பால் நாடாளுமன்றத்தில் நம்முடைய குரல்கள் நசுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய ஏழு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கூட்டம் நாளை (22.3.2025) சென்னையில் நடைபெறவுள்ளதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், ஃபேர் டீ-லிமிட்டேஷன்! இதுதான் இப்போது பேசுபொருளாக இருக்கிறது! திமுக ஏன் இதை பேசுபொருளாக ஆக்கியது என்றால், 2026-இல் தொகுதி மறு சீரமைப்பு கண்டிப்பாக நடந்தே ஆகவேண்டும்! அப்போது மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் நம்முடைய எம்.பி.,க்கள் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும்! இதை உணர்ந்துதான் நாம் முதலில்...