இந்தியா, ஜூன் 3 -- கமலின் கன்னட மொழி கருத்து நாளுக்கு நாள் அதிகப்படியான சர்ச்சைகளை சந்தித்து வரும் நிலையில், கமல் கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், கர்நாடக மக்கள் மீது ஆழ்ந்த மரியாதையுடன், நான் நேர்மையுடன் பின்வருவனவற்றை வழங்குகிறேன் எனக் கூறி தன் கருத்துகள் குறித்த விளக்கங்களை அளித்துள்ளார்.

மேலும் படிக்க| மதியம் 12 மணி வரை தான் டைம்.. அதுக்குள்ள கமல் மன்னிப்பு கேட்கலன்னா..! கமலுக்கு வந்த கெடு ..

"புகழ்பெற்ற டாக்டர் ராஜ்குமாரின் குடும்பத்தினர், குறிப்பாக சிவ ராஜ்குமார் மீது உண்மையான பாசத்துடன் பேசப்பட்ட தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, சூழலில் இருந்து எடுக்கப்பட்டது எனக்கு வேதனை அளிக்கிறது. நான் சொன்ன வார்த்தைகள், நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச...