இந்தியா, ஏப்ரல் 24 -- தமிழ்நாட்டில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் குறித்த முழுவிவரங்களை முழுமூச்சில் சேகரித்து பட்டியல்போடும் பணிகளை தமிழக அரசு தொடங்கி இருக்கிறது.

காஷ்மீர் மாநிலத்தின் பஹல்ஹாம் நகரில் நடந்த தீவிரவாத அச்சுறுத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரம் அடைந்து இருக்கிறது.

இதுதொடர்பாக மத்திய அரசு இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களுக்கான விசா வரும் 27ஆம் தேதி முதல் செல்லாது என அறிவித்துள்ளது. மேலும் மருத்துவ காரணங்களுக்காக பாகிஸ்தானியர்கள் பெற்ற விசா வரும் 29ஆம் தேதி வரை மட்டுமே செல்லும் என்றும் அறிவித்து இருக்கிறது. மேலும், இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்களை விரைவில் வெளியேற்றுமாறு ஒரு உத்தரவையும் போட்டிருக்கிறது.

மேலும் படிக்க: 'இந்து சமயத்தை இழிவு செய்துவிட்டார்! பொன்...