இந்தியா, மார்ச் 25 -- 1.4 மில்லியன் இந்திய பள்ளிகளில், குறைந்தது 61.6% மூன்று மொழிகளையும், 28.3% இரண்டு மொழிகளையும், 10.1% ஒரு மொழியை மட்டுமே வழங்குகின்றன என்று கல்வி அமைச்சகம் மார்ச் 24 மக்களவையில் பகிர்ந்து கொண்ட தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தமிழகத்தில் 3.2% பள்ளிகள் மட்டுமே மூன்று மொழிகளை வழங்குகின்றன என்ற தகவலும் கிடைத்தது.

மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி மக்களவையில் பகிர்ந்து கொண்ட தரவுகளில், "14, லட்சத்து 71 ஆயிரத்து 891 இந்தியப் பள்ளிகளில், குறைந்தது 61.6% மூன்று மொழிகளை பயிற்றுவிக்கின்றன. மொத்தமுள்ள, 24 கோடியே 80 லட்சத்து 45 ஆயிரத்து 828 மாணவர்களில் 74.7% பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறைந்தது 28.3% பேருக்கு அந்த பள்ளிகளில் இரண்டு மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதில் 16.8% மாணவர்கள் இந்த இருமொழிகளைப் படிக்க...