இந்தியா, ஏப்ரல் 16 -- நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மெகாஹிட் அடித்த படம் ஜெயிலர். இந்தப் படத்தில் நடிகர் ரஜினி காந்த், வசந்த் ரவி மற்றும் ரம்யா கிருஷ்ணன், ரித்து உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜெயிலர் 2 படம் வருமா என பலரும் நெல்சனிடமும் ரஜினிகாந்த்திடமும் கேட்டுக் கொண்டே வந்த நிலையில், அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க| சோசியல் மீடியா முழுவதும் ட்ரெண்ட் ஆகும் டைகர் முத்துவேல் பாண்டியன்.. கெத்து காட்டும் ஜெயிலர் 2 குழு

ஜெயிலர் 2 படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், தற்போது 'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பும் கேரளாவில் நடைபெற்று வருகிறது. இதனை நடிகை ரம்யா கிருஷ்ணன் தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தா...