இந்தியா, ஜூன் 1 -- 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் மூலம் நடிகர் ருத்ராவை விஷ்ணு விஷால் அறிமுகப்படுத்துகிறார்!

ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படமாக 'ஓஹோ எந்தன் பேபி' உருவாகி இருக்கிறது.

இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்கிறார். இந்தப்படத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். ரொமான்ஸ், ஹியூமர், எமோஷனல் என அனைத்தும் கலந்த படமாக இந்தப்படம் உருவாகி இருக்கிறது.

படத்தில் உதவி இயக்குநராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குநராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கு கதை சொல்கிறார். அந்த வகையில் படத்தில் நடிகராக வரும் விஷ்ணு விஷாலிடமும் கதையை சொல்ல, ரொமான்ஸ் கதை இல்லையா என அவர் கேட்கிறார். தொடர்ந்து ருத்ரா இயக்க...