இந்தியா, மே 11 -- பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம்(IMF) 1 பில்லியன் டாலர் கடன் வழங்கியது குறித்த கருத்து ஒன்றிற்கு நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு சுந்தர் பாகிஸ்தானை விமர்சித்தும் இந்தியாவை ஆதரித்தும் பேசியது மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. IMF-ன் நடவடிக்கையால் இந்தியா 'அவமானப்படுத்தப்பட்டதாக' பாகிஸ்தானிய பத்திரிகையாளர் ஒருவரின் ட்வீட்டைப் பார்த்த நடிகை குஷ்பு, கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுத்தார்.

மேலும் படிக்க| 'என்னோட சோல்மேட்ட பாத்துட்டேன்.. நீங்க வாழ்க்கையில சந்தோஷமா இல்லை.. அதுனால என்ன குறை சொல்றீங்க'- பாடகி கெனிஷா

பத்திரிகையாளர் ஷாபாஸ் ராணா தனது ட்வீட்டில், "IMF பாகிஸ்தானுக்கு 2.3 பில்லியன் டாலர் தொகுப்புகளை அங்கீகரித்துள்ளதால் இந்தியா மீண்டும் அவமானப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு ஒரு இராஜதந்திர அவமானத்தில், சர்வத...