மதுரை,சென்னை, ஏப்ரல் 3 -- மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

''மதுரையைத் தூங்கா நகரம் என்று சொல்லுவோம். ஆனால், இன்று அந்தத் தூங்கா நகரம், சிவப்பு நகரமாக மாறியிருக்கிறது. எங்கும் சிவப்பு நிறைந்திருப்பதைப் பார்த்து, முதல் ஆளாக மகிழ்ச்சி அடைகிறேன். ஏன் என்றால், திமுக கொடியில் பாதி சிவப்பு! கொடியில் மட்டுமல்ல; எங்களுக்குள் பாதி நீங்கள்! திராவிட இயக்கத்துக்கும் பொதுவுடைமை இயக்கத்துக்கும் இருப்பது, கருத்தியல் நட்பு!

இதன் அடையாளமாகத்தான் இந்த மாநாட்டுக்கு நான் வந்திருக்கிறேன்! திராவிட இயக்கத்துக்கும் - பொதுவுடைமை இயக்கத்துக்குமான உறவு என்பது, 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைத் தந்தை பெரியார் தமிழ் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டதில் இருந்தே தொடங்குகிறது. தன்னை ஒரு...