இந்தியா, மே 14 -- நடிகை நமீதா தனது கணவர் வீரேந்திர செளத்ரியுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றிக்காகவும், பிரதமர் மோடி நீண்டகாலம் வாழவும் சிறப்புப் பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை நமீதா, ''தமிழ்நாட்டு மக்கள் எல்லோருக்கும் வணக்கம். மே 7ஆம் தேதி, நம் நாட்டு இந்திய ராணுவம் தீவிரவாதிகளின் 9 தலைமையிடங்களை அழித்தது. அதற்கு ஆப்ரேஷன் சிந்தூர் என்று மிகப்பெரிய பெயர்.

ஆப்ரேஷன் சிந்தூர் உடைய வெற்றிக்காகவும், நம் கட்சி பாஜகவின் நீண்ட வாழ்நாளுக்காகவும், நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நீண்ட ஆயுளுக்காகவும் திருவண்ணாமலைக்கு வந்து பூஜைகள் பண்ணுனேன். அவங்களுக்கு நல்ல ஆசீர்வாதம் கிடைக்கணும்னு தான், நான் திருவண்ணாமலைக்கு வந்தேன். ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு நன்றி. நீண்ட நாள்க...