இந்தியா, ஏப்ரல் 28 -- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனுக்கள் மீதான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றாலும் அவர் அமைச்சராக முடியாது என அமலாக்கத்துறை வாதிட்ட நிலையில், செந்தில் பாலாஜி தரப்பு அதற்கு எதிராக வாதங்களை முன்வைத்தது.

போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்தார். அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ஜாமீன் வேண்டுமா? அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா? என செந்தில் பாலாஜிக்கு கடந்த விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபத...