இந்தியா, மே 23 -- ஓடிடியில் ஹாரர் த்ரில்லர் படங்களைப் பார்க்க ஆசையா இருக்கா? சரி, தமிழில் சில நல்ல ஆப்ஷன்கள் இருக்கு. மிகவும் த்ரில்லிங்காகவும், பயமுறுத்தும் விதத்திலும் சில தமிழ் ஹாரர் த்ரில்லர் படங்கள் வெளிவந்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளன. ஹாரர் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் 5 தமிழ் படங்களை இங்கே பாருங்க.

மேலும் படிக்க| மாறி மாறி வந்த அறிக்கை.. கடுப்பில் நீதிபதி போட்ட கண்டீஷன்.. ரவி மோகன்- ஆர்த்தியை ஆஃப் செய்த ஆர்டர்..

அந்தகாரம் படம் 2020 நவம்பரில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது. இந்தப் படத்தில் வினோத் கிஷன், அர்ஜுன் தாஸ், பூஜா ராமச்சந்திரன், குமார் நடராஜன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை விஜயராஜன் இயக்கியுள்ளார். ஒரு பார்வையற்ற நூலகர், ஒரு கிரிக்கெட் வீரர், ஒரு உளவியலாளர் ஆகியோருக்கு...