Hyderabad, ஏப்ரல் 23 -- இந்த வாரம் ஓடிடியில் பார்க்க நிறைய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் உள்ளன. பொதுவாக வெள்ளிக்கிழமை நாளில் ஓடிடி பக்கம் வெளியாகும் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் இந்த முறை வியாழக்கிழமையே (ஏப்ரல் 24) வெளியாகின்றன. இவற்றில் ஒன்று மலையாளத் திரைப்படம் எல்2: எம்புரான், மற்றொன்று தமிழ்த் திரைப்படம் வீர தீர சூரன். இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க| 'பிராங்க்'கால் அழும் நிலைக்கு போன பிரியா வாரியார்.. என்னதான் இருந்தாலும் இப்படியா பண்றது?

அதிக வசூல் செய்த மலையாள திரைப்படமாக வரலாறு படைத்த எல்2: எம்புரான் டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராக உள்ளது. இந்த திரைப்படம் நாளை (ஏப்ரல் 24) முதல் ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. அதாவது புதன்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு மேல் இந்த திரைப்ப...