இந்தியா, மே 15 -- நடிகர் ரவி மோகனுடன் தனக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை. அதனால் நான் முன்னாள் மனைவி கிடையாது என ஆர்த்தி கூறியிருந்த நிலையில், ஆர்த்தியை முன்னாள் மனைவி எனக் குறிப்பிட்டுள்ளார் ரவி மோகன். ex என்ற வார்த்தை மனதளவில் இருந்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

பல வருடங்களாக உடல், மன, உணர்ச்சி மற்றும் கடுமையான நிதி துஷ்பிரயோகங்களில் இருந்து தப்பிய பின், இறுதியாக இனி ஒன்றாக வாழ முடியாது என்றாகிவிட்ட பின் தான் விவாகர்தது முடிவை எடுத்தேன் என்று தன் விவாகரத்து முடிவுக்கு நியாயம் சொன்னார்.

தன் முன்னாள் மனைவி ஆர்த்தியும், அவரது அம்மாவும் தன்னிடம் பணத் தேவைகளுக்காகவே இருந்தனர் என்று பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார் ரவி. நான் அவர்களுக்கு தங்க முட்டை இடும் வாத்து. அவர்களது பணத் தேவைகளுக்கும், ஜாமீன் கையெழுத்துக்கும் தான் நான் தேவைப்படுவேன் என...