இந்தியா, ஏப்ரல் 6 -- லாபடா லேடிஸ் படத்தின் எழுத்தாளர் பிப்லாப் கோஸ்வாமி, தனது படத்திற்கு எதிராக சமீபத்தில் எழுந்த திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு நேற்று சனிக்கிழமை அறிக்கை வெளியிட்டார். இணையவாசிகள் பலர் சமீபத்தில் கிரான் ராவின் இயக்கத்தில் வெளிவந்த லாபடா லேடிஸ் படம் மற்றும் அரேபிய படமாண 'புர்கா சிட்டி' யை போலவே உள்ளதாகவும் இரண்டு படத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளதாகவும் கூறி வந்தனர்.

மேலும் படிக்க| ஏமாற்றம்.. ஆஸ்கர் ரேஸிலிருந்து விலகிய லபாடா லேடிஸ்.. மற்றொரு இந்திய படத்திற்கு வாய்ப்பு

இதையடுத்து லாபடா லேடிஸ் படத்தின் எழுத்தாளர் பிப்லாப் சமூக வலைத்தளங்களில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்" அரேபிய படம் தயாரிக்கப்படுவதற்கு முன்பே, 2014 ஆம் ஆண்டில் ஸ்கிரீன்ரைட்டர்ஸ் அசோசியேஷனில் லாபடா லேடிஸை பதிவு செய்ததாகக் கூறினார். விவாதத்த...