இந்தியா, ஏப்ரல் 27 -- நடிகர் விஜய்யின் சச்சின் திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் அந்தப் படம் தற்போது ரீரிலீஸ் செய்யப்பட்டது.

இந்தப் படம் வெளியான சில நாட்களிலேயே நல்ல லாபத்தை கொடுத்ததுடன், படத்திற்கான வரவேற்பால் தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இதையடுத்து, சச்சின் படத்தைப் போலவே, தனது தயாரிப்பில் வெளியான சில முக்கிய படங்களையும் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார் கலைப்புலி எஸ். தாணு.

அதன்படி, கலைப்புலி எஸ். தாணு தற்போது வரும் மே 1 ஆம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை மீண்டும் வெளியிட உள்ளதாக அறிவித்தார். இந்தப் படத்தை இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் இயக்கி இருந்தார்.

அந்தப் படத்தை தொடர்ந்து ரஜினியின் கபாலி படத்தை ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டு...