இந்தியா, மே 13 -- கோலிவுட்டில் தற்போது நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி தம்பதியின் பெயர் தான் ஹாட் டாப்பிக்காக உள்ளது. இவர்கள் இருவரது விவாகரத்து வழக்கும், ரவி மோகன் பாடகியும் தோழியுமான கெனிஷாவுடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் பேசுபொருளாக மாறியது. பின், மாறி மாறி அறிக்கைகளும் சமூக வலைதள பதிவுகளும் வெளியாகி பிரச்சனையை பெரிதுபடுத்தின.

மேலும் படிக்க| '18 வருஷம் ஆச்சு.. இனிமே ரொமான்ஸ் படத்துல நடிக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்..'- மாதவன் சொன்ன ஷாக் ஸ்டேட்மெண்ட்

இந்த நிலையில், ரவி மோகன் குடும்ப பஞ்சாயத்தில் தன் தலை உருட்டப்படுவதாக நடிகர் கூல் சுரேஷ் கூறியுள்ளார். இவர்களது பிரச்சனையில் தேவையில்லாமல் தன்னை இழுத்து அசிங்கமாக திட்டி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கூல் சுரேஷ், " 2 நாளுக்கு முன...