இந்தியா, ஏப்ரல் 28 -- கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை தந்தமைக்காக நடிகர் அஜித்திற்கு கடந்த ஜனவரி மாதம் பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று நடிகர் அஜித் குமாருக்கு ராஷ்டிரபதி பவனில் நடக்கும் விருது வழங்கும் விழாவில், ஜனாதிபதி திரெளபதி முர்மு இந்த விருதை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

மேலும் படிக்க| பசியோட கதை சொன்னேன்.. டீ மாஸ்டரே கரெக்ஷன் சொல்லுவாரு என்ன நம்புனது நண்பன் தான்.. சமுத்திரகனி ஷேரிங்

கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக அஜித்திற்கு விருது வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் பெயர் உச்சரிக்கப்பட்ட உடனேயே அவர் சபையில் உள்ளோருக்கு வணக்கம் செலுத்திவிட்டு, பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா ஆகியோர...