இந்தியா, ஏப்ரல் 5 -- மலையாள சூப்பர் ஹிட் படமான மஞ்சுமெல் பாய்ஸ் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், அந்தப் படம் பிற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது.இதன் மூலம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனையையும் படைத்தது. ஆனால் இந்த சாதனையைய ஒரு வருடம்கூட எம்புரான் படம் நீடிக்கவிடவில்லை என்கின்றனர் சிலர்.

மேலும் படிக்க: இதுதான் ஃபர்ஸ்ட்.. மலையாள சினிமாவில் சாதனை படைத்த மஞ்சுமெல் பாய்ஸ்

தற்போது மலையாள சூப்பர் ஸ்டார்களான மோகன்லால் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் இணைந்து நடித்த எல்2: எம்புரான் கேரளா மட்டுமின்றி இந்தியா முழுவதும் பயங்கர எதிர்பார்ப்புடன் வெளியானது. இந்தத் திரைப்படம் வெளியாகி 8 நாட்களில் ரூ. 250 கோடி ரூபாய் வசூலித்து மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் மொத்த வசூல் சாதனையை முறியடித்து மலையாளத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியுள்ளது என நெட்டிசன்கள் கரு...