இந்தியா, மார்ச் 31 -- தமிழ், தெலுங்கு இந்தி சினிமாவில் கலக்கி வரும் நடிகை சமந்தா ரூத் பிரபு தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார். அவரது 'த்ராலாலா மூவிங் பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக 'சுபம்' திரைப்படம் உருவாகியுள்ளது.

சமீபத்தில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது. 'சினிமா பண்டி' படத்தின் இயக்குநர் பிரவீன் கண்ட்ரேகுலா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஹர்ஷித் ரெட்டி, ஸ்ரீயா கொந்தம், கவி ரெட்டி ஸ்ரீநிவாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க| தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சமந்தா.. காமெடி கலந்த த்ரில்லராக வெளியாகவுள்ள சுபம் படம்..

இந்நிலையில், நேற்று மார்ச் 30 ஆம் தேதி நடிகை சமந்தா தயாரித்த முதல் படமான 'சுபம்' படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. புதுமணத் தம்பதிய...