இந்தியா, மார்ச் 3 -- பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 03 எபிசோட் : பாக்யா உடனான ஈஸ்வரியின் வாதத்துடன் தொடங்குகிறது இன்றைய எபிசோட். 'கோபியை திருமணம் செய்து கொள்வதில், உனக்கு என்ன பிரச்னை' என்று ஈஸ்வரி கேட்க, 'இன்று என்னுடைய நிலையில் இருந்து நான் யோசிக்கிறேன், எனக்கு இதில் உடன்பாடில்லை; வேண்டுமென்றால் உங்கள் மகனுக்கு மூன்றாவது திருமணம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டு புறப்படுகிறாள் பாக்யா. பாக்யாவின் அந்த பேச்சை, கடும்கோபத்தோடு எதிர்கொள்கிறாள் ஈஸ்வரி.

மேலும் படிக்க | அய்யனார் துணை சீரியல்: கொண்டாட்டத்தில் சோழன் வீடு.. திண்டாடும் நிலா வீடு.. இன்றைய எபிசோட்

இளைய மகன் எழில் உடன் தனிமையில் சந்தித்து பேசுகிறார் கோபி. நீயும், உன் அண்ணனும் வீடு திரும்ப வேண்டும், பாக்யா உடன் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். முத...