இந்தியா, ஏப்ரல் 28 -- டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பத்ம விருதுகள் 2025 வழங்கும் விழா இன்று ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா, நடிகர் அஜித் குமார், சேகர் கபூர், அரிஜித் சிங் மற்றும் ரிக்கி கேஜ் போன்ற பிரபலங்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார். பங்கஜ் உதாஸுக்கு மரணத்திற்குப் பின் கௌரவம் அளிக்கப்பட்டது.

பத்ம விருதுகளைப் பெற நாடு முழுவதிலுமிருந்து இந்திய பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டனர். நந்தமுரி பாலகிருஷ்ணா தனது பத்ம பூஷன் விருதைப் பெற பாரம்பரிய ஆந்திரப் பிரதேச உடையில் வந்திருந்தார், அதே சமயம் அஜித் குமார் கௌரவ விருதினைப் பெர சூட் அணிந்து வந்திருந்தார். இவர்களுடன் சேகர் கபூர் மற்றும் ஷோபனா ஆகியோரும் பத்ம பூஷன் விருதைப் பெற்றனர், அதே நேரத்தில் பங்கஜ் உதா...