இந்தியா, ஏப்ரல் 23 -- பிரபல நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ். இவர் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். இவருக்கும், திருநெல்வேலியைச் சேர்ந்த அக்‌ஷயா என்ற பெண்ணிற்கும் கடந்த ஆண்டு ஜப்பானில் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. இந்த திருமண நிகழ்வில் திரைத்துறையினர் உட்பட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க| நெப்போலியன் மகன் உடல்நிலை குறித்த அவதூறு.. ' அவங்கள கைது செய்யணும்' - நெல்லை காவல் ஆணையத்திற்கு பறந்த புகார்!

இந்த நிலையில் சமீபகாலமாக தனுஷின் உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வந்தது. இதனைக் கவனித்த நெப்போலியன், தனுஷ் குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தன் உறவினர் மூலம் நெல்லை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, தனுஷ் உடல்நிலை குறித்து அவத...