இந்தியா, ஏப்ரல் 21 -- "நீட் தேர்வை ரத்து செய்தால் தான் கூட்டணி என பாஜகவிடம் சொல்ல அதிமுகவுக்கு தகுதி இருக்கிறதா?" என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, "நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போட்டது திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது தான்" என குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "பேரவை தலைவர் அவர்களே, எதிர்கட்சித் தலைவர் அவர்கள்,யார் கொண்டு வந்த காரணத்தால்தான் இவர் சிக்கல் என்று சொல்லுகிறார். சரி, அந்த சிக்கலை சரி செய்வதற்கு உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இப்பொழுது கிடைத்திருக்கிறது. நாங்கள் செய்தது தவறோ தவறு இல்லையோ, நான் அந்த வாதத்...