இந்தியா, மே 29 -- நம்மில் பலரும் மாதுளையை விரும்பி எடுத்துக்கொள்கிறோம். சிலர் தினமும் ஒரு மாதுளை ஜூஸ் குடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். குழந்தைகளின் ஸ்நாக்ஸ் பாக்ஸில் மாதுளையை வைப்பதில் பெற்றோர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் எப்போதும் வீட்டில் மாதுளையை வைத்திருக்க வேண்டும் எண்ணுகின்றனர். இதனால் பெரும்பாலான மக்கள் மாதுளைகளை அதிக அளவில் சந்தையில் இருந்து வாங்கி, வீட்டிற்கு கொண்டு வந்தது சேமித்து வைக்கின்றனர். இப்படி அடிக்கடிட மாதுளையை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைப்பார்கள்.

ஒருவேளை நீங்களும் இதைச் செய்யலாம், ஆனால் இது மாதுளையைச் சேமிப்பதற்கான தவறான வழி என்பது உங்களுக்குத் தெரியுமா? குளிர்சாதன பெட்டியில் சேமிக்கப்படாத பல பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளன. இந்த பட்டியலில் மாதுளையின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. மாதுளையை குளிர்சாதன பெட்ட...