Hyderabad, ஜூன் 1 -- தென்னிந்திய சினிமா முன்னணி நடிகை சமந்தா தயாரிப்பில் உருவான முதல் படம் 'சுபம்'. தெலுங்கு திகில் நகைச்சுவைப் படமாக உருவான இந்தப் படத்தை பிரவீண் கண்ட்ரேகுலா இயக்கியுள்ளார். ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் பேனரின் கீழ் சமந்தா தயாரித்துள்ளார்.

மேலும் படிக்க| 'முன்னணி நடிகர், டாப் லைன் நடிகர் என்பதெல்லாம் மக்களுக்கு தான்.. எங்களுக்குள் இல்லை'- நடிகை அபிராமி

இப்படத்தில் ஹர்ஷித் ரெட்டி, சரண், ஸ்ரீநிவாஸ் கவி ரெட்டி, ஸ்ரேயா கொண்டம், ஷாலினி கொண்டேபுடி, ஸ்ராவணி லக்ஷ்மி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமந்தா ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். 'சுபம்' படத்தின் டீசர், டிரெய்லர் ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

மே 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'சுபம்' படம், சில விமர்சனங்களை...