இந்தியா, ஏப்ரல் 16 -- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்த ஆக்‌ஷன் த்ரில்லர் படமான கூலி மூலம் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார். இந்திய சினிமாவின் சில பெரிய நடிகர்களை ஒன்றிணைப்பதால் இந்தப் படம் ஏற்கனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமிர் கானும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிப்பார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்க| நெட்டிசன்களிடையே வைரலாகும் கூலி படம்.. அப்டேட் மேல் அப்டேட் தரும் ரசிகர்கள்..

கன்னட நடிகர் உபேந்திர ராவ், ஹைதராபாத்தில் சிவகுமார் மற்றும் ராஜ் பி ஷெட்டியுடன் தனது அடுத்த, 45வது படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் பங்கேற்றார். அப்போது இந்த செய்தியை உறுதிப்படுத்தினார். பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இந்த பதிலை அளித்துள்ளதும் சோசியல் மீடியாவில் வைரல...