இந்தியா, ஏப்ரல் 27 -- மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் இயக்குனர் அனில் ரவிபுடி கூட்டணியில் மெகா 157 என்ற பெயரிடப்படாத படம் ஏற்கனவே தயாராகி வருகிறது. அனில் ரவிபுடி இந்த ஆண்டு 'சங்கராந்திக்கு வஸ்துன்னாம்' எனும் ஹிட் படத்தின் மூலம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் அடித்துள்ளதால் அவரது அடுத்த படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு சிரஞ்சீவி முழு நீள நகைச்சுவை வேடத்தில் நடிப்பார் என்ற தகவல்களால் படத்தின் மீது மேலும் கிரேஸ் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க| கேரள சினிமாவில் தொடரும் போதைப் பொருள் பயன்பாடு.. ஹைபிரீட் கஞ்சாவுடன் சிக்கிய பிரபல இயக்குநர்கள்..

இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாராவை தயாரிப்பாளர்கள் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை கதாநாயகியாக நடிக்க வைக்க அனில் ரவிபுடி வி...