இந்தியா, ஏப்ரல் 23 -- மலையாள நடிகை வின்சி அலோஷியஸ் நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது படப்பிடிப்பு தளத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும், அப்போது தவறாக நடந்து கொண்டதாகவும் புகார் அளித்தார். இதனை நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டார். இதையடுத்து தற்போது கேரள திரைப்பட அமைப்பு நடிகருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க| வாயில் இருந்து ஒழுகிக் கொண்டு.. அந்த நடிகரால் அவ்வளவு தொந்தரவு- உண்மையை உடைத்த மலையாள நடிகை

செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு பேசிய கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு (FEFKA) பொதுச் செயலாளர் பி. உன்னிகிருஷ்ணன், ஷான் டாம் சாக்கோ தனது பணிச்சூழலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக உறுதிப்படுத்தினார். மேலும் திரைப்பட அமைப்பு நடிகருக்கு தனது தவறுகளை சரிசெய்ய இறுதி எச்சரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

"ப...