இந்தியா, ஜூன் 12 -- நாயகன் படத்திற்குப் பிறகு 38 ஆண்டுகால கூட்டணியில் தக் லைஃப் படத்தில் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் மீண்டும் இணைவது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருந்தாலும் படத்தின் விமர்சனங்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை. இதனால் படம் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வந்தது.

மேலும் படிக்க| தக் லைஃப் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: தமிழ்நாட்டில் 6 ஆம் நாளில் 2 கோடி ரூபாய்க்குள் சுருங்கிய தக் லைஃப் பட வசூல்!

படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 15 கோடிக்கும் அதிகமாக இருந்த நிலையில் 6 ஆம் நாள் வசூல் 2 கோடியாக குறைந்தது. இதனால் படத்தின் வசூல் பெரும் ஏமாற்றத்தை சந்தித்து படக்குழுவை அதிர்ச்சியாக்கியுள்ளது. இதற்கிடையில், படக்குழுவிற்கு மேலும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அது படத்தின் வசூல் குறைப்பால், திரையரங்குகளில் தக் லைஃப்...